அப்பா முன்னாடியே இப்படியா...பிகினி உடையில் பிறந்தநாள் கொண்டாடிய பிரபல நடிகரின் மகள்...
பிரபல நடிகர் ஆமிர்கான் மகளின் பிறந்தநாள் புகைப்படங்களை வைத்து இணையவாசிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
நடிகர் அமீர்கானின் முதல் மனைவி ரீனா தத்தாவுக்கு மகளாக பிறந்தவர் இரா கான். இவர் தனது 25வது பிறந்தநாளை முன்னிட்டு நீச்சல் குளத்தில் குளித்தபடியே வெளியே வந்து பிகினி உடையுடன் கேக் வெட்டிக் கொண்டாடிய போட்டோக்கள் இணையத்தில் வைரலானது.
அதேசமயம் தனது காதலர் நுபுர் சிக்காரே மற்றும் நண்பர்களுடன் நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிந்து குளித்தபடி கும்மாளம் போட்ட போட்டோக்களையும் இரா கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் அமீர்கான் மற்றும் அவரது மகன் மேல் சட்டை எதுவும் அணியாமல் அப்படியே அரை டவுசர் உடன் நிற்க அப்பாவுக்கு முன்னாடியே பிகினி உடையில் இரா கான் கேக் பிறந்தநாள் கொண்டாடலாமா என்று இணையவாசிகள் பலரும் விமர்சித்தனர்.
இதனைப் பார்த்த பிரபல பாலிவுட் பாடகி மற்றும் இசையமைப்பாளரான சோனா மொகபத்ரா இராகானுக்கு இப்போ 25 வயசாகுது. அவங்க அப்பா அமீர்கான் மட்டுமில்லை, யாருடைய அனுமதியையும் அவள் வாங்கத் தேவையில்லை. அவளுக்கு பிடித்த உடையை அணிந்து கொண்டு பிறந்தநாளை கொண்டாட முழு உரிமையும் இருக்கு என விமர்சித்தவர்களுக்கு கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.