வாடிக்கையாளர்களின் குறைகள் தீர்க்கப்பட்டு விட்டதா? ஓலா CEO-வை சீண்டிய நகைச்சுவை நடிகர்!
நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா ஓலா சிஇஓ(Ola CEO)பவிஷ் அகர்வாலை விமர்சித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
Ola CEO
ஸ்டாண்டப் காமெடியன் , யூடியூபர், நடிகர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர் குணால் கம்ரா . இவர் கடந்த சில தினகங்களுக்கு முன் ஓலா நிறுவனம் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து சமூகவலைத்தளங்களில் அந்நிறுவனத்தின் குறைகளை வெளிப்படையாகச் சுட்டிக் காட்டினார்.
இதனால், கடுப்பான ஓலா நிறுவனத் தலைவர் பவிஷ் அகர்வால், 'உங்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கிறேன், நீங்கள் வந்து இந்த பிரச்சினைகளைத் தீர்த்துத் தாருங்கள்,' என்று தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கடுமையாக விமர்சித்து பதிலடி கொடுத்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக நடிகர் குணால் கம்ரா எக்ஸ் தளப் பக்கத்தில் கடந்த 4 மாதங்களில் ஓலா ஸ்கூட்டர் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு முழு இழப்பீடு வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், கடந்த ஆண்டு நவம்பர் 10ம் தேதி வரையிலான வாடிக்கையாளர்களின் குறைகள் தீர்க்கப்பட்டு விட்டதா?என்றும் கேள்வி எழுப்பினார்.
நடிகர் குணால் கம்ரா
மேலும் நிறுவனத்தின் அடுத்த திட்டம் என்ன என்பது கூட எங்களுக்குத் தெரியாது. என்னை வேலைக்கு எடுப்பதை விட்டு விட்டு, அடுத்த திட்டம் என்ன என்பதைத் தெரியப்படுத்த வேண்டும்.' என்று ஓலா நிறுவனத்தின் உரிமையாளர் பவிஷ் அகர்வாலை டேக் செய்து பதிவிட்டிருந்தார்.
இதனால் நடிகர் குணால் கம்ரா மற்றும் பவிஷ் அகர்வாலுக்கு இடையே தொடர்ந்து எக்ஸ் தளத்தில் வார்த்தைப் போர் நீடித்து வருகிறது. தற்பொழுது இந்த பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.