RIP Marimuthu: இனி எதிர்நீச்சல் குணசேகரன் இவர் தான் - இயக்குநர் அதிரடி முடிவு?
எதிர்நீச்சல் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க போகும் பிரபலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மாரிமுத்து மறைவு
சின்னத்திரையில் அனைவரையும் கவர்ந்து விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தான். பெரியத்திரை அளவுக்கு அதில் நடிக்கும் நடிகர்கள் ஆக்டிங்கில் பயங்கரம்.
அந்த வகையில், ஆதி குணசேகரனாக நடித்த மாரிமுத்துவின் நடிப்புக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், டிரெண்டிங் ஸ்டாராக இருந்து வந்தவர் இன்று காலை ‘எதிர் நீச்சல்’ சீரியல் டப்பிங் பணியில் இருந்ததையடுத்து மருத்துவமனை வாசலில் மாரடைப்பால் உயிரிழந்தார்.
அடுத்த குணசேகரன்?
மாரிமுத்துவின் திடீர் மறைவு அதிர்ச்ச மட்டுமின்றி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தொடர்ந்து, ஆதி குணசேகரன் கதாபாத்திரத்திற்கு எத்தனை பேர் வந்தாலும் அவருக்கு ஈடாக மாட்டார்கள் என்று பலர் வேதனையுடன் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி இந்த கதாபாத்திர இடத்தை நிரப்ப முடியும் என நம்பப்படுகிறது.
இவரை அணுக தற்போது இயக்குனர் திருச்செல்வம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
பிசியான நடிகராக இருக்கும் இவர் மாரிமுத்துவுக்காக இந்த கதாபாத்திரத்தை நிச்சயம் ஏற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்தியா இலவச தங்குமிடம் அல்ல: இலங்கை தமிழரின் கோரிக்கையை நிராகரித்த இந்திய உச்ச நீதிமன்றம் IBC Tamil
