இன்ஜினியரிங் படிப்பு, ஹோட்டலில் வேலை; வாட்டிய வறுமை - மறைந்த நடிகர் மாரிமுத்து கடந்து வந்த பாதை!
மறைந்த பிரபல சீரியல் நடிகர் மாரிமுத்து கடந்து வந்த பாதை பற்றி பார்க்கலாம்.
நடிகர் மாரிமுத்து
சின்னத்திரையில் அனைவரையும் கவர்ந்து விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தான். பெரியத்திரை அளவுக்கு அதில் நடிக்கும் நடிகர்கள் ஆக்டிங்கில் பயங்கரம்.
அந்த வகையில், ஆதி குணசேகரனாக நடித்த மாரிமுத்துவின் நடிப்புக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தான் கடந்து வந்த கஷ்டங்கள் குறித்து பேசியபோது, இன்ஜினியரிங் படித்தேன். நான் ரொம்ப கஷ்டப்பட்ட சமயத்தில் ஹோட்டல்ல வேலை பார்த்தேன்.
கடந்து வந்த பாதை
1994-ல் எனக்கு கல்யாணம் நடந்தது. இத்தனை வருஷம் என்னுடன் என் மனைவி குடும்பம் நடத்துவதே சாதனை தான். நான் லவ்லியான கணவர் கிடையாது. சில பேர் மனைவிய குழந்தை மாதிரி பார்த்துக் கொள்வார்கள், பூ வாங்கி கொடுப்பார்கள். ஆனால் நான் அப்படி இல்லை. ஆனால் என் மீது அளவுக்கு மீறிய பாசம் என்பது எப்போதுமே உள்ளது.
இவளைவிட வேறுயாராவது நான் கல்யாணம் பண்ணி இருந்தால் நிச்சயம் சினிமாவில் தோற்றிருப்பேன். மனைவி கொடுக்கும் எனர்ஜி தான் கணவனோட வெற்றிக்கு காரணம். என்னுடைய மனைவி கொடுத்த உத்வேகத்தால் தான் நான் இன்று வெற்றியடைந்து இருக்கிறேன்.
மறைவு
எதிர்நீச்சல் சீரியல் மூலம் எனக்கு கிடைத்த இந்த ரீச் என்பதை ஒரு ராக்கெட் வேகமாக தான் நான் ஃபீல் பண்றேன். படிப்படியா முன்னேறி வந்த ஒருவனை திடீரென ராக்கெட்டில் ஏற்றிவிட்டது போல் என்னை மக்கள் மத்தியில் அந்த சீரியல் கொண்டுபோய் சேர்த்துள்ளது. சீரியலில் நான் பண்ணும் ரியாக்ஷன்கள் எல்லாம் என் தந்தையுடைய முகபாவங்களை தான் செய்துள்ளேன்.
எதிர்நீச்சல் சீரியலுக்கு கிடைத்த வரவேற்பால் தற்போது சினிமாவிலும் எனக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. அது மகிழ்ச்சி அளிக்கிறது எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், டிரெண்டிங் ஸ்டாராக இருந்து வந்தவர் இன்று காலை ‘எதிர் நீச்சல்’ சீரியல் டப்பிங் பணியில் பேசிக்கொண்டிருந்தபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்றதில் அங்கு மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். ஆரம்ப கால கட்டத்தில் மணிரத்னம், வசந்த், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.
கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற படங்களை இயக்கியுள்ள மாரிமுத்து, பரியேறும் பெருமாள் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். சமீபத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து இந்தியன் 2ல் நடித்து வந்தார்.
அவருக்கு வயது 57. மாரிமுத்துவின் திடீர் மறைவு அதிர்ச்ச மட்டுமின்றி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மறைந்தாலும், இவர் பேசும் மதுரைச் சார்ந்த தமிழ் வசனங்களும், கோபமான மொழிநடையும் மக்கள் மனதில் நீங்காமல் நிற்கும்!