அடுத்த 3 மணி நேரத்திற்கு..மழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
மழை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஒரு சில மாவட்டங்களில் லேசான இடி மின்னல், காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு எற்படுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பதிகள், நீலகிரி, கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.
அடுத்த 3 மணி நேரம்..
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை முதலே மழை பெய்து வருவதால் பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.
இதனிடையே அடுத்த 4 மணி நேரத்திற்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. அதன் படி ஆலந்தூர், அரக்கோணம், கும்பிடிப்பூண்டி, காஞ்சிபுரம், குன்றத்தூர், பொன்னேரி, ஶ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், திருவொற்றியூர், ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.