அடுத்த 5 நாட்களுக்கு மழை தான் - தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை!

Tamil nadu Summer Season TN Weather
By Sumathi May 09, 2024 06:17 AM GMT
Report

அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கோடை காலத்தை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த 5 நாட்களுக்கு மழை தான் - தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை! | Yellow Alert For Tamil Nadu 5 Days Of Summer Rain

அதிகபட்சமாக கரூர், ஈரோடு, மதுரை விமான நிலையம் பகுதிகளில் 106 டிகிரி வெயில் நிலவியது. இந்நிலையில், , தமிழ்நாட்டில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக

மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் ; பள்ளிக்கல்வித் துறை விடுத்த இறுதி எச்சரிக்கை!

மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் ; பள்ளிக்கல்வித் துறை விடுத்த இறுதி எச்சரிக்கை!

மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் தென்காசி, நெல்லை, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், விழுப்புரம்,திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நேற்று கனமழை பெய்தது. சென்னை மற்றும் புறநகரில் சில இடங்களில் மழை பெய்தது. தொடர்ந்து, தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 5 நாட்களுக்கு மழை தான் - தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை! | Yellow Alert For Tamil Nadu 5 Days Of Summer Rain

மேலும், இன்று முதல் 5 நாட்களுக்கு 40 கி.மீ. வேகத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், பிஹார் ஆகிய மாநிலங்களில் மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.