புலம்பெயர்ந்தவர்களுக்கு இனி இடமில்லை, நகரம் தாங்காது - மேயர் அறிவிப்பு!

New York Migrants
By Vinothini Jul 21, 2023 11:20 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

இனியும் புலம்பெயர்ந்து வருபவர்களுக்கு நியூயார்க்கில் இடமில்லை என்று அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.

நியூயார்க் நகரம்

தற்பொழுது நியூயார்க் நகரில் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதில் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து வருபவர்கள் உள்ளனர். இதனால் ஆப்பிரிக்கா, லத்தின் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து வருபவர்களை ஏற்றுக்கொள்வதில் அமெரிக்க மாகாண அரசுகளிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

newyork-mayor-says-theres-no-place-for-migrants

தொடர்ந்து, நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார். அதில் அவர், "நியூயார்க் நகரம் நிரம்பிவிட்டது. எங்கள் கோப்பை நிரப்பப்பட்டுவிட்டது. புலம்பெயர்ந்த மக்களுக்கு இனி இங்கு இடமில்லை" என்று கூறியுள்ளார்.

மேயர் அறிவிப்பு

இதனை தொடர்ந்து, அவர் கூறுகையில், "கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சுமார் 90,000 பேர் நியூயார்க்கிற்க்கு வந்துள்ளனர். இனியும் வந்தால் அவர்கள் தங்குவதற்கு இடமில்லை. இதனை நான் முன்னரே பதிவு செய்திருந்தேன். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது இங்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை நேரடி சாட்சியாக பார்க்கிறோம்.

newyork-mayor-says-theres-no-place-for-migrants

நியூயார்க்கில் வீட்டுகளின் விலை உயர்ந்துவிட்டது. இங்கு உணவு, போக்குவரத்து மற்றும் பிற தேவைகளின் விலையானது அமெரிக்காவில் பிற மாகாணங்களில் இல்லாத அளவு உயர்ந்துள்ளது. இது இனியும் தொடரக் முடியாது, தேசியப் பிரச்சினையின் மொத்த எடையை நியூயார்க் நகரம் மட்டும் சுமக்கிறது என்பது தவறு" என்று கூறியுள்ளார்.