சூப்பர்மேன் ,ஸ்பைடர்மேன் போல் நியூயார்க்கை கலக்கும் தோசைமேன் ...!
தோசை என்றால் வேண்டாம் என்று சொல்பவர்களே இருக்க மாட்டார்கள்.
நியூயார்க்கில் பிரபலமான இந்திய தோசை
தென் இந்தியா மற்றும் இலங்கைத் தமிழர்களிடையே பல பகுதிகளில் மிகவும் புகழ்பெற்ற உணவு.சைவ உணவு வகைகளில் முக்கிய பங்கு இந்த தோசைக்கு உண்டு.
அப்படி இருக்கையில் நியூயார்க்கில் தமிழர் ஒருவர் தோசை கடையை நடத்தி வருகிறார்.இவரின் பெயர் திருக்குமார் கந்தசாமி இலங்கையை சேர்ந்த இவர் 18 வருடங்களாக நியூயார்க்கில் தோசைக்கடையை நடத்தி வருகிறார்.
இவரின் தோசை கடைக்கு அங்கே மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு.அமெரிக்காவில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து இவருடைய கடையை தேடி வந்து வரிசையில் நின்று சாப்பிடும் அளவிற்க்கு பிரபலம்.
ருசிச்சு சாப்பிடும் வாடிக்கையாளர்கள்
இவர் தெருவில் மிகச் சிறிய தோசையை கடையை வைத்து அதிகளவில் இலாபம் பார்த்துக் கொண்டிருக்கிறார் தோசை மேன் திருக்குமார்.
நியூயோர்க் இரட்டைக் கோபுரம் அருகே கிறிஸ்டோபர் தெருவில் தான் தோசை மேன் கடை உள்ளது. கடையின் பெயர் நியூயார்க் தோசை (New york dosa).
சமீபத்தில் புகழ்பெற்ற தமிழ் யூடியூபர் இர்பான் இவரின் கடைக்கு சென்று அதனை வீடியோவாக பதிவு செய்து தனது Youtube பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
அந்த விடியோவானது பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.என்னதான் பணம்,புகழ் இவற்றை எல்லாம் சம்பாதித்தாலும் இவரின் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை சிரித்த முகத்தோடு வரவேற்று அவர்களுக்கு உணவுகளை வழங்கி வருகிறார்.
இதனால் அவரை அப்பகுதி மக்கள் சூப்பர்மேன் ,ஸ்பைடர்மேன் போல் இவரை செல்லமாக தோசைமேன் என்று அழைக்கின்றனர்.