டிவி சேனலில் பாலியல் டார்ச்சர்; கணவர் போன அப்புறம் பல பேர்.. நியூஸ் ஆங்கர் பளீச்
டிவி சேனலுக்குள் பாலியல் டார்ச்சர் குறித்து செளதாமணி வேதனைத் தெரிவித்துள்ளார்.
செளதாமணி
செய்திவாசிப்பாளர், ஆசிரியை, பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் என வலம் வருபவர் செளதாமணி. இந்நிலையில் இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில், “ என்னுடைய கணவர் சிறுநீரக செயலிழப்பு காரணமாக, கடந்த 2010ம் ஆண்டு உயிரிழந்தார்.
எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். அவர்கள் வெளிநாட்டில் படிக்கின்றனர். கணவர் இறந்த பிறகு, நான் வேலை பார்த்த இடத்திலேயே என்னை திருமணம் செய்து கொள்ள சிலர் அணுகினார்கள். ஆனால் எனக்கு இரண்டாம் கல்யாணம் செய்து கொள்வதில் விருப்பமில்லை.
பாலியல் துன்புறுத்தல்
என்னுடைய கணவர் இறந்த பின்னர், நான் வழக்கம் போல செய்தி வாசிப்பதற்கு சேனலுக்கு சென்றபோது, எனக்கு வழக்கத்திற்கு மாறாக வாசிப்பதற்கு செய்திகள் குறைவாக இருந்தன. இதனையடுத்து அந்த செய்திகளை வழங்கும் தலைமையிடம் சென்று இது குறித்து கேட்டேன்.
ஆனால் அவரோ, நீ என்ன என்னை கண்டுக்கவே மாட்டுகிறாய் என்று ஜாடை மாடையாக பேசினார். போனில் அழைத்து, உன்னுடைய குழந்தைகளை நான் பார்த்துக் கொள்கிறேன். உன்னுடைய செலவை நான் கவனித்துக் கொள்கிறேன் என்றெல்லாம் பேசினார். பல பெண்களுக்கு அவர் இவ்வாறு பாலியல் ரீதியான துன்புறுத்தலை கொடுத்திருக்கிறார்.
இதனையடுத்து நான் ஒரு மாதத்திலேயே அங்கிருந்து வெளியே வந்து விட்டேன். அதன் பிறகு சன் டிவி என்றாலே எனக்கு உடம்பெல்லாம் கூசும். இவ்வளவு அருவருப்பானவர்கள் அங்கு இருக்கிறார்களா? என்று தோன்றும் என வேதனை தெரிவித்துள்ளார்.