சொந்த திருமணத்தில் காணாமல் போன மணமக்கள் - கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி
வரவேற்பு நிகழ்ச்சியின்போது, தம்பதி காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வரவேற்பு நிகழ்ச்சி
அமெரிக்கா, நியூயார்க் நகரைச் சேர்ந்த பிரணவ் ஜா என்பவருக்கும், விக்டோரியா என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. அதனைத் தொடர்ந்து, அங்குள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் இவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு இவர்கள் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் வருகை தந்தனர்.

ஆனால் மணமக்கள் இருவரும் நீண்ட நேரமாகியும் வரவே இல்லை. எனவே திடீரென காணாமல் போன மணமக்களை உறவினர்கள் தேட தொடங்கினர். சில நிமிடங்கள் கழித்தே அவர்கள் லிப்டில் மாட்டிக்கொண்டிருப்பது தெரியவந்தது. பின்னர் அவர்கள் இருவரையும் மீட்க குடும்பத்தினர் முயற்சித்தனர்.
ஜோடி மிஸ்ஸிங்
அதனையடுத்து லிப்ட் ஆபரேட்டர்களாம் முடியாத நிலையில், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்தனர். லிப்டின் மேல் பகுதியில் ஓட்டை போட்டு லிப்டின் உள்ளே இருந்த மணமக்கள் உட்பட 6 பேரை 2 மணி நேர முயற்சிக்கு பின்னர் பத்திரமாக மீட்டனர்.
தொடர்ந்து இதுகுறித்து மணமக்கள் கூறுகையில், "எங்கள் நிகழ்ச்சி 16-வது மாடியில் நடைபெறுகிறது. நாங்கள் ஹோட்டலுக்குள் வந்து லிப்டில் ஏறினோம். ஏறி சுமார் 5 அடிக்கு பிறகு லிப்ட் தானாக நின்றது. நீண்ட நேர முயற்சிக்கு பிறகே நாங்கள் பத்திரமாக மீட்கப்பட்டோம். எங்களில் யாருக்கும் எதுவும் ஆகவில்லை." என்றனர். இது தொடர்பான செய்தி தற்போது வைரலாகி வருகிறது.