முதலிரவில் மர்ம முறையில் தம்பதி மரணம் - காலையில் அதிர்ச்சி காட்சி!
முதலிரவு அறையில் புதுமண தம்பதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தம்பதி மரணம்
உத்தரப்பிரதேசம், அயோத்தி சாதத் கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப். அதே பகுதியை சேர்ந்த ஷிவானி என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. அன்று இரவே மணமக்களுக்கு முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டது.
தொடர்ந்து இருவரும் தங்களது அறைக்கு சென்றுள்ளனர். மறுநாள் காலை புதுமண தம்பதியினர், தங்களது அறைக்கதவை திறக்கவேயில்லை.
தீவிர விசாரணை
உடனே சந்தேகமடைந்த உறவினர்கள் தட்டியும் திறக்காததால், வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கையில் புதுப்பெண் சடலமாக கிடந்துள்ளார். அங்கிருந்த ஃபேனில், மணமகன் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
அதன்படி, விரைந்து வந்த போலீஸார் உடல்களை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில். மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, மணமகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
திருமணத்திற்கு முந்தைய உறவுகள் தொடர்பான பிரச்சனையா? அல்லது வேறு ஏதேனும் கள்ளக்காதல் விவகாரமா? என்பது குறித்து 2 தரப்பு பெற்றோரிடமும் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.