1 கோடி மதிப்பில் பரிசு பொருட்கள்..மாமியாருக்கு gift wrap செய்து கொடுத்த மருமகள்!
மாமியாருக்கு ரூ.1 கோடி மதிப்பில் பரிசு பொருட்களை வழங்கி மருமகள் அசத்தியுள்ளார்.
ஆந்திரா
ஆந்திர மாநிலம் ராஜோலு நகரை சேர்ந்தவர் காசு ஸ்ரீநிவாஸ் -மனைவி பவானி தம்பதியினர். இவர்களது சுகேஷ்க்கு என்ற மகன் உள்ளார்.
2ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீரங்க நாயகி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இந்த நிலையில், 50ஆவது வயதை எட்டிய பவானிக்கு பிறந்தநாள் விழாவை தடபுடலாக ஏற்பாடு செய்தார் மருமகள்.
மாமியார்
இந்த பிறந்தநாள் விழாவில் அசத்தலான மேக்கப் மற்றும் உடை அலங்காரத்துடன் மாமியார் பவானி பங்கேற்று பிரமாண்டமான 50 கிலோ கேக்கை வெட்டினார்.
மேலும் பரிசுப் பெட்டக்கத்தில் தலா 100 கிராம் எடையுள்ள இரண்டு தங்க பிஸ்கட்டு,ஒரு வைர நெக்லஸ்,ரூ. 50 லட்சத்து 50 ஆயிரத்து 50 ரூபாய் 50 காசு ரொக்கத்தையும் கிப்ட் ராப் (gift wrap) செய்துகொடுத்து மருமகள் அசத்தினார் .