2 வாரத்தில் புது மாப்பிள்ளை பலி - பாதயாத்திரையில் நேர்ந்த சோகம்!
15 நாட்களில் புது மாப்பிள்ளை இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாத யாத்திரை
திருத்தணி, கேசரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நரேஷ். பெங்களூருவில் மென்பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும், சுவாதி என்ற பெண்ணுக்கும் அண்மையில் திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில், புதுமண தம்பதிகள் இருவரும் திருப்பதி ஏழுமலையானை வழிபடுவதற்காக படி வழியாக பாத யாத்திரை சென்றுள்ளனர்.
புது மாப்பிள்ளை பலி
அப்போது 2 ஆயிரத்து 350ஆவது படியில் ஏறும்போது, திடீரென நரேஷுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே, சக பக்தர்கள் நரேஷை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் நரேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். திருமணம் ஆன 15 நாட்களில் புது மாப்பிள்ளை இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.