திருமணமாகி சில நாள்தான்; பெண் கிணற்றில் குதித்து தற்கொலை - காப்பாற்ற முயன்ற கணவனும் பலி!
கிணற்றில் குதித்த மனைவியை காப்பாற்ற முயன்ற கணவனும் சேர்ந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பத் தகராறு
சேலம், மாரியம்மன் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் கதிர்வேல் மகன் அருள்முருகன்(27). இவருக்கும், கூலித்தொழிலாளி சந்தோஷ் என்பவரின் மகள் அபிராமி (19) என்பவருக்கும், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணமாகியுள்ளது.
தொடர்ந்து, புத்தாண்டு தினத்தன்று வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த மனைவி, அருகில் தோட்டத்திலுள்ள கிணற்றில் குதித்துள்ளார்.
புதுமண ஜோடி பலி
இதனைக் கண்ட கணவன் மனைவியை காப்பாற்ற அதே கிணற்றில் குதித்துள்ளார். இதில் இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து போலீஸார் தீயணைப்பு படையினர் துணையுடன் 1 மணி நேரத்திற்கு மேல் போராடி இருவரது உடல்களையும் மீட்டு, பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.