அசந்து தூங்கிய தோனி; மனைவி முன்னாடியே ரசித்து பார்த்து துள்ளி குதித்த ரசிகை -வீடியோ வைரல்!
தோனி விமானத்தில் அசந்து தூங்கும் வீடியோ இணைத்தில் வைரலாகி வருகிறது.
அசந்து தூங்கிய தோனி
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்சின் தற்போதைய கேப்டனுமாவார் தோனி . இவர் இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். தற்போது தோனி என்டர்டெயின்மென்ட் என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் முதல் படமாக எல்ஜிஎம் என்ற படம் விலையானது.
இதில் ஹரீஷ் கல்யாண், இவானா, யோகி பாபு போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் ப்ரொமோஷன் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள தோனியும் அவரது மனைவி சாக்ஷியும் சென்னை வந்தனர்.
பின்னர் நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிந்த பிறகு தேனியும் சாக்ஷியும் மீண்டும் ராஞ்சிக்கு விமானத்தில் பயணம் சென்றுள்ளனர். அப்போது தோனி விமானத்தில் அசந்து தூங்கியுள்ளார். அருகில் மனைவி சாக்ஷி பாடல்கள் கேட்டுக்கொண்டிருந்துள்ளார்.
ரசித்து பார்த்த ரசிகை
இந்நிலையில் அசந்து தூங்கிக்கொண்டிருந்த தோனியை விமான பணிப்பெண் ஒருவர் தனது மொபைல் போன் மூலம் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவில் மற்றொரு பணிப்பெண் தோனி தூங்குவதை ரசித்துப் பார்த்தபடியே உற்சாகத்தில் துள்ளி குதிக்கிறார்.
இந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது.
MS Dhoni is an emotion, He's everyone's favourites.
— CricketMAN2 (@ImTanujSingh) July 29, 2023
What a beautiful video! pic.twitter.com/GSxgXpArc2