முதல் திருமணத்தை மறைத்த கணவர் - ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கிய புது தம்பதி!

Thoothukudi Death
By Sumathi Dec 29, 2022 07:19 AM GMT
Report

காதல் தம்பதி ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தம்பதி தற்கொலை

தூத்துக்குடி, அனந்தமாடன் பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கமுனியசாமி. தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரிக் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சீதாசெல்வி. இருவரும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்த நிலையில், 3 மாதங்களுக்கு முன்பு,

முதல் திருமணத்தை மறைத்த கணவர் - ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கிய புது தம்பதி! | Newly Married Couple Commits Suicide In Tuticorin

வீட்டின் எதிர்ப்பை மீறி அப்பகுதியில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்தனர். தனியாக வீடு வாடகை எடுத்து தங்கியிருந்திருக்கின்றனர். தொடர்ந்து கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

பரபரப்பு

இந்நிலையில், வெகுநேரமாகியும் வீட்டுக்கதவு திறக்கப்படவில்லை. அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியே பார்த்தபோது ஒரே கயிற்றில் கணவன், மனைவி இருவரும் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருப்பதைப் பார்த்தனர்.

புகாரின் பேரில் போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அதனையடுத்த விசாரணையில், தங்கமுனியசாமிக்கு ஏற்கெனவே திருமணம் நடந்துள்ளதை மறைத்துள்ளார். இதனால் இருவரும் அடிக்கடி சண்டையிட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.