20 வயதில் காதல்: 79 ஆண்டு கால வாழ்க்கை - இறப்பிலும் கைகோர்த்த தம்பதி!
வயதான தம்பதி அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல் வாழ்க்கை
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்தவர் ஹூபர்ட் மேலிகோட். இவரது மனைவி ஜூன். இவர்களுக்கு திருமணமாகி 79 ஆண்டுகள் ஆகிறது. இருவருக்கும் 3 பிள்ளைகள், 7 பேரப் பிள்ளைகள், 11 கொள்ளுப் பேரன், பேத்திகள் உள்ளனர்.
இந்த ஆண்டு ஜூன் மாதம் தான் இருவரும் தங்களின் 79 ஆவது திருமண நாளை கொண்டாடியுள்ளனர். அந்தக் கொண்டாட்டத்தின் போது அவர்களிடம் பலரும் நீண்ட, மகிழ்ச்சியான திருமண வாழ்விற்கு என்ன காரணம் என்று கோரியுள்ளனர்.
இறப்பிலும் நெகிழ்ச்சி
அப்போது இருவருமே நாங்கள் வாக்குவாதத்தில் ஈடுபட மாட்டோம் என்று கூறியுள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் ஜூன் உடல் நிலை சரியில்லாமல் போயுள்ளார். இதனால் அவரை குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தாளாத ஹூபர்ட் சில நேரங்களிலேயே அவரும் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டார். உடனே குடும்பத்தினர் அவரையும் ஜூன் அனுமதிக்கப்பட்ட அதே மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இருப்பினும் இருவரும் சில மணி நேர வித்தியாசத்தில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.