நான் விலக இதுதான் சரியான நேரம் - நியூசி. ஜாம்பவான் ஓய்வு அறிவிப்பு!

Cricket New Zealand New Zealand Cricket Team Tim Southee
By Sumathi Nov 15, 2024 09:00 AM GMT
Report

டிம் சவுத்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

டிம் சவுத்தி

நியூசிலாந்தில் உள்ள ஹாமில்டன் நகரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி நடைபெறவுள்ளது. அந்த போட்டியுடன் ஓய்வு பெற இருப்பதாக நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும்,

tim southee

முதன்மை வேகப் பந்துவீச்சாளருமான டிம் சவுத்தி(35) அறிவித்துள்ளார். ஒருவேளை நியூசிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறினால் அதில் மட்டும் விளையாடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

அலுமினியம் பேட் வைத்து விளையாடிய கிரிக்கெட் வீரர் - சர்ச்சையில் சிக்கியது யார் தெரியுமா?

அலுமினியம் பேட் வைத்து விளையாடிய கிரிக்கெட் வீரர் - சர்ச்சையில் சிக்கியது யார் தெரியுமா?

ஓய்வு அறிவிப்பு

104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள டிம் சவுத்தி, அதில் 385 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

நான் விலக இதுதான் சரியான நேரம் - நியூசி. ஜாம்பவான் ஓய்வு அறிவிப்பு! | New Zealand Tim Southey Opens Up About Retirement

சமீபத்தில் நடந்து முடிந்த இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக தனது டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியிருந்தார். டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்களுக்கு அதிகமாகவும், ஒருநாள் போட்டிகளில் 200க்கும் அதிகமான விக்கெட்கள், டி20 போட்டிகளில் 100க்கும் அதிகமான விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

உலக அளவில் இந்த மைல்கல் சாதனையை செய்த ஒரே பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.