கம்பீர் மட்டும் இல்லையென்றால் என் மகன்.. சஞ்சு சாம்சன் தந்தை ஆதங்கம்!
சஞ்சு சாம்சனின் தந்தை குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சஞ்சு சாம்சன்
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அடுத்தடுத்து 2 சதங்களை விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சஞ்சு சாம்சன் பெற்றுள்ளார்.
இந்நிலையில், இவரது தந்தை சாம்சன் விஸ்வநாத், அளித்துள்ள பேட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், ``என் மகனின் 10 ஆண்டுகால வாழ்க்கையைச் சீரழித்த மூன்று கேப்டன்கள் இருக்கிறார்கள்.
தந்தை குற்றச்சாட்டு
அவர்கள், தோனி, கோலி, ரோஹித். இவர்களுடன் பயிற்சியாளர் டிராவிட். இந்த நான்கு பேரும் எனது மகனின் 10 ஆண்டுகால வாழ்க்கையை வீணாக்கிவிட்டனர்.
Sanju samson father accused Dhoni,Rohit and Kohli for not picking his son in the team when he was averaging 28 in list A,35 in FC, and 27 in ipl until 2020
— π (@shinzohattori5) November 12, 2024
Sanju's PR wants to hide this video from youpic.twitter.com/sYaQKoU9gu
ஆனாலும், அந்த நெருக்கடியிலிருந்து சஞ்சு வலுவாக வெளிவந்தார். இப்போது, நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். கம்பீருக்கும், சூர்யகுமார் யாதவுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
இவர்கள் மட்டும் இப்போது வரவில்லையென்றால், கடந்த காலத்தைப் போலவே சஞ்சுவை நீக்கியிருப்பார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.