12 வருஷ காதல்; 5 வயது குழந்தை முன் காதலரை மணந்த முன்னாள் பிரதமர்!

New Zealand Marriage
By Sumathi Jan 13, 2024 10:02 AM GMT
Report

முன்னாள் பிரதமர் ஜெஸிந்தா ஆர்டெர்ன் தனது காதலரை கரம் பிடித்துள்ளார்.

ஜெஸிந்தா ஆர்டெர்ன் 

நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெஸிந்தா ஆர்டெர்ன்(43). 2017 முதல் 2023 வரை நாட்டின் 40வது பிரதமராக பதவி வகித்தார். அப்போது கிளார்க் கெய்போர்டுடன்(47) காதலில் இருந்து வந்தார்.

new-zealand former pm

இருவரும் 2012ல் ஆக்லாந்தில் மெட்ரோ உணவக விருது நிகழ்ச்சியில் முதல் முறையாக சந்தித்து பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின் அது காதலாக மாறியுள்ளது. தொடர்ந்து, 2019ல் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

கோவிலில் ரகசிய திருமணம் செய்த பிரபல சீரியல் நடிகை - கணவர் இவரா?

கோவிலில் ரகசிய திருமணம் செய்த பிரபல சீரியல் நடிகை - கணவர் இவரா?

திருமணம்

அதன்பின் 2022ல் திருமணம் செய்வதாக இருந்தனர். ஆனால் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளால் திருமணத்தை ஒத்தி வைத்தனர். இதற்கிடையில் இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது.

12 வருஷ காதல்; 5 வயது குழந்தை முன் காதலரை மணந்த முன்னாள் பிரதமர்! | New Zealand Former Prime Minster Got Wedd

இந்நிலையில், இருவரும் வெலிங்டனில் இருந்து 310 கி.மீ. தொலைவில் உள்ள வடக்கு தீவின் கிழக்கு கடற்கரையில் கிராகி ரேஞ்சில் உள்ள ஹாக்ஸ் விரிகுடாவில் தங்களது மகளின் முன் திருமணம் செய்துக்கொண்டனர்.