என்னது... எலிகளை கொன்றால் கோடிகளில் சம்பளமா?
எலிகள் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அலறி அடித்துக்கொண்டு ஓடிவிடுவார்கள்.
எலிகள் தொல்லை
அதிலும் குறிப்பாக பெண்களை சொல்லவே வேண்டாம். அப்படி இருக்கையில் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் எலிகளை பிடித்து கொடுக்கும் வேலைக்கு 1 கோடியே 30 லட்சம் சம்பளம் தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் எலிகளின் தொல்லை அதிகமாக இருப்பதால் பல்வேறு தரப்பு மக்களிடம் இருந்து பல புகார்கள் நியூயார்க் நகர நிர்வாகத்திடம் குவிந்தது. இதனால் அனைத்து இடங்களிலும் எலிகளின் தொல்லைகள் அதிகமாக இருந்ததால்
கோடியில் சம்பளம்
பொதுமக்கள் பொறுமை இழந்து நியூயார்க் மாநகர நிர்வாகத்திற்குக் கடிதங்களை அனுப்பி வருகின்றனர். எலிகளை பிடிக்க நகர சுகாதாரத் துறை ஊழியர்கள் பல்வேறு முயற்சிகளை செய்தும், எலிகளின் எண்ணிக்கையை குறைக்க முடியவில்லை எனக் கூறியுள்ளனர்.
இதனால் ’டைரெக்டர் ஆஃப் ரோடண்ட் மிட்டிகேஷன்’ என்ற வேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளார் நியூயார்க் நகர மேயர். இந்த பணியை ஏற்பவர்களுக்கு மாத சம்பளமாக 170,000 டாலர்கள். இது இந்திய மதிப்பில் 1.3 கோடி ரூபாய் ஆகும்.
இப்படி வேடிக்கையான ஒரு வேலையை செய்வதற்கு இத்தனை லட்சம் சம்பளமா என இணைய வாசிகள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர் .