அமெரிக்காவில் தலை தூக்கிய துப்பாக்கி கலாச்சாரம் : முடிவுரை எழுதும் ஜோ பைடன் ?

Joe Biden United States of America
By Irumporai Jun 07, 2022 06:12 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

நியூயார்க்கில் துப்பாக்கி வாங்குவதற்கான வயதினை 18 இல் இருந்து 21 ஆக உயர்த்தியுள்ளது. அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக துப்பாக்கி சூடு சம்பவம் அதிகரித்து வருகிறது , நியூயார்க்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பஃபலோ சூப்பர் மார்க்கெட்டில் 18 வயது நிரம்பிய இளைஞர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார் .

அமெரிக்காவில் தலை தூக்கிய துப்பாக்கி கலாச்சாரம்

இந்த சம்பவத்தில் 10 ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் உயிரிழந்தனர், இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை அருகில் இருந்த முன்னாள் காவல் துறை அதிகாரி ஒருவர் தக்க சமயத்தில் தடுத்ததால் அதிகமான உயிர் பலி தடுக்கப்பட்டது.

அமெரிக்காவில் தலை தூக்கிய துப்பாக்கி கலாச்சாரம் : முடிவுரை எழுதும் ஜோ பைடன் ? | New York Gun Law In Wake Us Shooting

இந்த நிலையில் இந்த துப்பாக்கி சூடு சமபவத்தை நடத்திய பெய்டன் ஜெண்ட்ரான் என்ற 18 வயதான இளைஞர்தான் இந்த சம்பவத்தை நிகழ்த்தியதாகவும் தான் கருப்பின மக்களை குறிவைத்துதான் இந்த தாகுதலை நடத்திய்தாக ஒப்புக்கொண்டார் இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கலங்கிய ஜோ பைடன்

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூறுகையில் :

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டு வரும் தருணம் வந்துவிட்டது என்றும் கூறியிருந்தார்.மேலும், நாம் எல்லாம் எப்போது துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிராக ஒருமித்த குரல் கொடுக்கப்போகிறோம்?

இன்னும் சிலர் 'துப்பாக்கி சுதந்திரத்தை' ஆதரிக்கின்றனரே! துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நேரம் வந்துவிட்டது. ஒவ்வொரு பெற்றோரும், ஒவ்வொரு குடிமகனும் துப்பாக்கி கலாச்சாரத்துக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். 

அமெரிக்காவில் தலை தூக்கிய துப்பாக்கி கலாச்சாரம் : முடிவுரை எழுதும் ஜோ பைடன் ? | New York Gun Law In Wake Us Shooting

மேலும், அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டு வரும் தருணம் வந்துவிட்டது என்று அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூறியிருந்த நிலையில் தற்போது நியூயார்க் மாகாண கவர்னர் துப்பாக்கி சீர்திருத்த சட்டங்களின் தொகுப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

கடுமையாக்கப்பட்ட துப்பாக்கி உரிமை சட்டம்

மாநில செனட்டில் நிறைவேற்றப்பட்ட துப்பாக்கி சீர்திருத்த சட்டத்திற்கு கவர்னர் கேத்தி ஹோச்சுல் ஒப்புதல் அளித்துள்ளார். பஃபலோவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் நடந்த இனவெறி படுகொலையைத் தொடர்ந்து துப்பாக்கிச் உரிமை சட்டங்களை கடுமையாக்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் தலை தூக்கிய துப்பாக்கி கலாச்சாரம் : முடிவுரை எழுதும் ஜோ பைடன் ? | New York Gun Law In Wake Us Shooting

அதன்படி ,துப்பாக்கி வாங்குவதற்கான வயதை வரம்பை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தியுள்ளார், மேலும் பொதுமக்கள் கவச உடை போன்றவற்றை வாங்கவும் இந்த சட்டம் தடைவிதிக்கிறது.

அமெரிக்கா எங்கள் மீது அரசியல் செய்கிறது : இந்தியா கண்டனம்