புத்தாண்டு: சென்னையில் இதற்கெல்லாம் தடை - முக்கியமா போக்குவரத்து!
புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை மாநகரம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்துள்ளன.
புத்தாண்டு
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சென்னை மாநகரம் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் முக்கிய சாலைகளின் போக்குவரத்தை மாற்றி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, காமராஜர் சாலை மற்றும் ராஜாஜி சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ள போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
போக்குவரத்துக்கு தடை
“கடற்கரை உட்புற சாலை 31-ந்தேதி இரவு 7 மணி முதல் 1-ந்தேதி காலை 6 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படும். கடற்கரை உட்புற சாலையில் இந்த நேரத்தில் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படாது.
அனைத்து வாகனங்களும் கலங்கரை விளக்கம் சந்திப்பு வழியாக மட்டுமே வெளியேற அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.