புத்தாண்டு கொண்டாட போறீங்களா? உங்களை தலைக்கு மேல் கண்காணிக்க போகும் போலீஸ்
புத்தாண்டு கொண்டாட்டத்தில் இன்னும் ஒரு நாள் உள்ள நிலையில், பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார்.
காவல்துறை கட்டுப்பாடு
வரும் 31 ஆம் தேதி வாகன சோதனைகள் நடத்தப்படும். சோதனைச்சாவடிகள் மட்டுமின்றி ரோந்து வாகனம் மூலமும் பைக் ரேஸ் தடுக்கப்படும்.
புத்தாண்டு கொண்டாட்டங்களை இரவு நேரத்திலும் தெளிவாக படம்பிடிக்க கூடிய ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.
மது போதையில் வாகனங்களை இயக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். மெரினா காமராஜர் சாலையில் டிசம்பர் 31ஆம் தேதி இரவு 7 மணிக்கு மேல் வாகனங்களுக்கு அனுமதியில்லை.
புத்தாண்டு கொண்டாட்டங்களை நள்ளிரவு 1 மணிக்குள் நட்சத்திர விடுதிகள் முடித்துக் கொள்ள வேண்டும்.
நட்சத்திர விடுதிகளில் போதைப்பொருட்கள் பயன்படுத்தக்கூடாது என சென்னை காவல் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.