இருமினால் ரத்தம்; தொடர் காய்ச்சல் - புதிதாக பரவும் மர்ம வைரஸ்
புதிய வைரஸ் ஒன்று பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மர்ம வைரஸ்
ரஷ்யாவில் மர்ம வைரஸால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதீத உடல் வெப்பத்துடன் மக்களுக்கு காய்ச்சல் ஏற்படுகிறது. இருமலுடன் ரத்தம் வெளியாவது இதன் அறிகுறியாக உள்ளது.
இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் தான் வந்துள்ளது. மேலும் இதனை அந்நாட்டு அதிகாரிகள் திட்டமிட்டு மறைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மக்கள் அச்சம்
தொடர்ந்து இந்த மர்ம வைரஸ் குறித்த தகவல் வைரலான நிலையில், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ரஷ்ய மருத்துவத்துறை அதிகாரிகள் இதனை மறுத்துள்ளனர். மேலும், புதிய நோய்க்கிருமிகள் ஏதும் கண்டறியப்படவில்லை.
மைக்ரோ பிளாஸ்மா நிமோனியா உள்ளிட்ட பொதுவான சுவாசத் தொற்றுகள் மட்டுமே இருக்கிறது. இந்த மர்ம வைரஸ் என கூறப்படுவது உண்மையில் சுவாசக் குழாய் தொற்றாக இருக்கலாம்.
அது புதிய வைரஸ் அல்ல. அறிகுறிகள் மோசமடையும்போது அவசர சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.