புதிய வகை வைரஸ் தொற்று பரவல் - சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு!

Cold Fever Tamil nadu Virus
By Sumathi Sep 03, 2025 08:23 AM GMT
Report

புதிய வகை வைரஸ் தொற்று பரவல் குறித்து சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

வைரஸ் தொற்று

சென்னையில் புதிய வகை வைரஸ் தொற்று பரவி வருவதாக மக்கள் மிகுந்த அச்சம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

புதிய வகை வைரஸ் தொற்று பரவல் - சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு! | New Virus Fever Spread In Chennai Details

அதில், “சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி வருவது சாதாரண இன்புளூயன்சா காய்ச்சல் மட்டுமே; புதிய வகை வைரஸ் தொற்று எதுவும் இல்லை.

தமிழகம் முழுவதும் மது விற்பனை கிடையாது - எந்த தேதியில் தெரியுமா?

தமிழகம் முழுவதும் மது விற்பனை கிடையாது - எந்த தேதியில் தெரியுமா?

சுகாதாரத்துறை அறிவுரை

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50% நோயாளிகளுக்கு இன்புளூயன்சா வகை பாதிப்பு மட்டுமே உள்ளது; ஆண்டின் இறுதி 3 மாதங்களில் டெங்கு பாதிப்பு 2 மடங்காக அதிகரிப்பது வழக்கமான ஒன்றுதான்;

புதிய வகை வைரஸ் தொற்று பரவல் - சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு! | New Virus Fever Spread In Chennai Details

வீட்டை சுற்றியுள்ள இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும். காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளது.