தெருநாய்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு இதுதான் - கமல்ஹாசன் பளீச்!

Kamal Haasan Tamil nadu
By Sumathi Sep 03, 2025 08:01 AM GMT
Report

தெருநாய்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு குறித்து கமல்ஹாசன் பேசியுள்ளார்.

தெருநாய்கள் பிரச்சினை

கமல்ஹாசன் எம்.பி. செய்தியாளர்களை சந்தித்தார். அப்போதுதனது தயாரிப்பு நிறுவனம் எனக்கு வழங்க இருக்கும் விருதை பெற துபாய் செல்கிறேன்.

தெருநாய்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு இதுதான் - கமல்ஹாசன் பளீச்! | Kamal Haasans About Solving Stray Dog Issue

ராஜ் கமல் இயக்கத்தில் வெளியான அமரன் படத்திற்கு, தெலுங்கில் நான் நடித்த ஒரு படத்திற்கு எனக்கு விருது கிடைத்துள்ளது. விருதை பெற்றுக்கொண்டு உடனே மீண்டும் டெல்லிக்கு செல்கிறேன். ஓட்டை காணோம், வாக்காளர் பட்டியலில் பெயரை காணோம் என நானே சொல்லி கொண்டு இருக்கிறேன்.

கன்னத்தில் அடிக்க வந்த ஜெயக்குமார்; தடுத்த நயினார் நாகேந்திரன் - அவ்வளவு நெருக்கம்!

கன்னத்தில் அடிக்க வந்த ஜெயக்குமார்; தடுத்த நயினார் நாகேந்திரன் - அவ்வளவு நெருக்கம்!

கமல்ஹாசன் கருத்து 

வாக்காளர் பட்டியல் தொடர்பாக பெரிய சந்தேகம் எழுந்ததால் புகார் செய்து இருக்கிறோம். தெருநாய்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு ரொம்ப ‘சிம்பிள்’. அதைபற்றிய விஷயம் தெரிந்தவர்கள்; உலக சரித்திரம் தெரிந்தவர்கள், சமூக சுகாதாரம் என்னவென்று தெரிந்தவர்கள் நமக்காக பொதி சுமந்த கழுதையை காணவில்லை;

kamal hassan

அதுகுறித்து யாரேனும் கவலைப்படுகிறீர்களா?. கழுதைகளை காப்பாற்ற வேண்டும் என்று யாராவது பேசுகிறார்களா?. எல்லா உயிர்களையும் காப்பாற்ற வேண்டும்; எவ்வளவு முடியுமோ அவ்வளவு காப்பாற்ற வேண்டும்.

அதுதான் என்னுடைய கருத்து என்று கூறினார். தொடர்ந்து பிரதமர் மோடியின் தாயாரை அவமானப்படுத்தியது குறித்த கேள்விக்கு “யாரையும் அவமானப்படுத்துவதுபோல் யாரும் பேச வேண்டிய அவசியமில்லை” என்று தெரிவித்துள்ளார்.