குஜராத் நிறுவனங்களுக்காக எங்கள் ஏற்றுமதியாளர்களை பரிதவிக்க விடுவதா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி

M K Stalin Narendra Modi Trump tariff
By Karthikraja Sep 03, 2025 06:17 AM GMT
Report

 இந்தியா மீது அமெரிக்கா வரி

ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதை தண்டிக்கும் வகையில், இந்தியா பொருட்களுக்கு 50% சதவீதம் வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். 

குஜராத் நிறுவனங்களுக்காக எங்கள் ஏற்றுமதியாளர்களை பரிதவிக்க விடுவதா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி | Mk Stalin Slams Modi For Trump Tariff Issue

இதன் காரணமாக, இந்தியாவில் உள்ள பல்வேறு தொழில்கள் பாதிப்பை சந்தித்துள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டின் தொழில்நகரமான திருப்பூர் கடுமையான பாதிப்பை சந்தித்தது.

இதனால் ஏற்பட்ட பாதிப்பை சரிகட்ட, சிறப்பு நிவாரண திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். 

குஜராத் நிறுவனங்களுக்காக எங்கள் ஏற்றுமதியாளர்களை பரிதவிக்க விடுவதா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி | Mk Stalin Slams Modi For Trump Tariff Issue

இந்த வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட திருப்பூரை, கண்டுகொள்ளாமல் விட்ட மத்திய அரசை கண்டித்து, திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏற்றுமதியாளர்களை பரிதவிக்க விடுவது எந்த விதத்தில் நியாயம்?

இதனையடுத்து, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கண்டன ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றி என முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே! தாங்கள் ஆதரித்த ட்ரம்ப் அவர்கள் விதித்துள்ள USTariff காரணமாக, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும், இந்தியாவின் பல மாநிலத் தொழிலாளர்களுக்கும் வாழ்வளிக்கும் DollarCity திருப்பூர் தவிக்கிறது. 

குஜராத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் இரஷ்ய கச்சா எண்ணெய் கிடைப்பதற்காக, பல ஆயிரம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் எங்கள் ஏற்றுமதியாளர்களை நீங்கள் பரிதவிக்க விடுவது எந்த விதத்தில் நியாயம்?

நான் ஏற்கெனவே, கடிதத்தில் கூறிய நிவாரணங்களை உடனடியாக அறிவித்து, ஆவன செய்யுங்கள்! அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வுகண்டு, VishwaGuru எனும் தங்கள் பட்டப் பெயருக்கு நியாயம் செய்யுங்கள்! இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்து உணர்வுகளைப் பதிவுசெய்த அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி" என தெரிவித்துள்ளார்.