சென்னையில் புது டிராபிக் ரூல்ஸ், இந்த ஸ்பீட்ல போனா விடிஞ்சிரும் - கொந்தளிக்கும் மக்கள்!
தற்போது சென்னையில் கொண்டுவரப்பட்ட புதிய டிராபிக் ரூல் குறித்து மக்கள் அவதிப்படுகின்றனர்.
அதிரடி ரூல்ஸ்
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று சென்னையில் வாகன விபத்துகளை தடுப்பதற்காக புதிய ரூல் குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர் கூறுகையில், ''சென்னை பெருநகரில் வாகன விபத்துகளை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
விபத்துகளை குறைக்க மணிக்கு 40 கிலோமீட்டர் வேகம் என்ற கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. சென்னையில் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தை மீறி வாகனத்தை ஓட்டினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
இந்த கட்டுப்பாடு சென்னையில் 10 இடங்களில் அமலுக்கு வருகிறது. விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை மீறி வேகமாக செல்லும் வாகனங்களை கண்டறிய 20 இடங்களில் கண்காணிப்பு கருவிகள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்று கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
இந்நிலையில், மக்களிடம் இந்த புதிய சட்டம் குறித்து பேசுகையில், " எந்த ஆட்டோ ஓட்டுனராலும், எந்த பைக் ஓட்டுனராலும் இந்த 40 கி.மீ ஸ்பீடில் செல்ல முடியாது.
சென்னையில் காலை 6-7 மணியளவில் 20 நிமிடங்களில் செல்கிறோம், அதுவே 9-10 மணியளவில் 1 மணிநேரம் ஆகிவிடுகிறது, இதில் குறிப்பிட்ட ஸ்பீடில் செல்வது கடினம்".
மேலும், " காஸ்ட்லியான சிசி அதிகம் கொண்ட பைக் எல்லாம் எப்படி அந்த ஸ்பீடில் செல்ல முடியும், வண்டியின் செயின் ஸ்பைர் போய்டும், பெட்ரோல் அதிகம் குடிக்கும் என்ஜின் வீனா போகும், இது ரொம்ப கடினம்" என்றும் கூறியுள்ளனர்.