புதிய வேக கட்டுப்பாட்டு விதிகள்.. ஒரே நாளில் இவ்வளவு வசூலா?

Chennai
By Vinothini Nov 05, 2023 06:34 AM GMT
Report

சென்னையில் புதிய வேக கட்டுப்பட்டு விதிகள் கொண்டுவந்ததால் வாகனங்களுக்கு தொடர்ந்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

புதிய கட்டுப்பாடு

சென்னையில் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வாகன ஓட்டிகளுக்கு வேக வரம்பை போக்குவரத்து காவல் துறை அறிவித்தது. அதன்படி புதிய கட்டுப்பாட்டு விதிகள், இலகுரக வாகனங்கள் அதிகபட்சமாக 60 கிலோமீட்டர் வேகத்திலும், கனரக வாகனங்கள் அதிகபட்சமாக 50 கிலோமீட்டர் வேகத்திலும் செல்ல வேண்டும்.

new traffic rules

இரண்டு சக்கர வாகனங்கள் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்திலேயே செல்ல வேண்டும். ஆட்டோக்கள் 40 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க வேண்டும். குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வகையான வாகனங்களும் மணிக்கு 30 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டுமென போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

வட இந்தியாவில் படிக்க சென்ற மருத்துவ மாணவர் மர்ம மரணம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம்!

வட இந்தியாவில் படிக்க சென்ற மருத்துவ மாணவர் மர்ம மரணம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம்!

அபராதம்

இந்நிலையில், இந்த புதிய வேக கட்டுப்பாடு விதிமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்தது. எனவே இந்த வேகா கட்டுப்பாடு விதிமுறையை கடைபிடிக்காமல் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

new traffic rules

அதன்படி, சென்னையில் வேக கட்டுப்பாட்டு விதிகள் அமல்படுத்தப்பட்ட முதல் நாளில் 121 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. மேலும், அதில் அபராதம் விதித்ததில் ரூ.1.21 லட்சம் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.