டிஜிட்டல் ஊடகங்களுக்கு புதிய தொழில்நுட்ப விதி - இடைக்கால தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம்

itrules madrashighcourt
By Irumporai Sep 16, 2021 12:16 PM GMT
Report

டிஜிட்டல் ஊடகங்களை மத்திய அரசு கண்காணிக்க வகை செய்யும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. டிஜிட்டல் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு கொண்டு வரும் வகையில் மத்திய அரசு புதிய சட்டம் இயற்றியது

அதன்படி, நாட்டின் பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும் எதிராக இருக்கும் தகவல்களை தடுப்பற்காக இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது என மத்திய அரசு விளக்கமளித்திருந்தது.

இந்த விதிமுறை படைப்பாளிகளின் மற்றும் எழுத்தாளர்களின் சுதந்திரத்துக்கு எதிராக கூறி, கர்நாடக இசை கலைஞர் டிஎம் கிருஷ்ணா, டிஜிட்டல் நியூஸ் பப்ளிஷர் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இதற்கு மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளில் பதிப்பாளர்களை பாதுகாக்கும் வகையில் உள்ளது என்றும் நாட்டின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையும் பாதுகாக்கும் வகையில் தான் இந்த புதிய விதிகள் உள்ளது எனவும் தெரிவித்துள்ளது

இந்த நிலையில் இன்று வழக்கு விசாரணை வந்தபோது, டிஜிட்டல் ஊடகங்களை மத்திய அரசு கண்காணிக்க வகை செய்யும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு இடைக்கால தடை விதைத்து சென்னை உயர் நீதிமன்றம்.

மத்திய அரசு கண்காணிப்பு மூலம் கட்டுப்படுத்துவது, ஊடகங்களின் சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்றும் ஊடகங்களின் சுதந்திரத்தை பறிப்பதாக இருந்தால் ஜனநாயகத்தின் 4வது தூண் இல்லாமல் போய்விடும் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளில் தொடர்பான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்காவிட்டால், அக்டோபர் இறுதியில் வழக்கை விசாரிக்கிறோம் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.