சரியா போட்டுக்கோங்க - இனி ஹெல்மெட் போட்டாலும் ரூ.2000 பைன் தான்..?
சாலை பாதுகாப்பில் ஹெல்மெட் அணிவது தற்போது கட்டாயமான ஒன்றாக மாறிவிட்டது.
ஹெல்மெட்
சாலை விபத்துகளில் உயிரிழப்போரின் விகிதம் அதிகமாவதை உணர்த்த அரசு, சட்டங்களை கடுமையாக்கி, தற்போது கிட்டத்தட்ட அனைவரும் ஹெல்மெட் அணியும் நிலைக்கு கொண்டு வந்து விட்டது.
இருப்பினும், முக்கிய சாலைகளில் வரும் போது மட்டுமே ஹெல்மெட் அணிபவர்களும் இங்கு அதிகமாகவே இருந்து வருகிறார்கள். காவலர்கள் கவனிக்கும் போது மட்டும் ஹெல்மெட் அணிந்து விட்டு மற்றசமயங்களில் ஹெல்மெட் இல்லாமல் சுற்றுவதையே பலரும் கையாண்டு வருகிறார்கள்.
சட்டம்
இவர்களுக்கு தான் தற்போது பெரும் ஷாக் வந்துள்ளது. அதாவது இனி ஹெல்மெட் அணிந்து கொண்டாலும், அதனை சரியாக பெல்ட் போட்டு லாக் செய்யாவிட்டால், அப்போதும் பைன் போடப்படும் என கூறப்படுகிறது.
பெரும் விபத்துகளில் மாட்டுபவர்கள் விழும் போது, ஹெல்மெட் தவறி போகும் நிலையில், உயிருக்கே ஆபத்தான சூழலை எதிர்கொள்கிறார்கள். அதனை சரிசெய்ய இவ்வாறான சட்டங்களை நடைமுறை படுத்தினால், சாலை விபத்துக்கள் தவிர்க்கப்படும் என மத்திய அரசு நம்புவதாக கூறப்படுகிறது.
அதன் படி போலீசார் செக் செய்யும் போது, ஹெல்மெட் போடுவது மட்டுமின்றி அதன் பெல்ட்டை சரியாக அணிய வேண்டும். அவ்வாறு அணியாவிட்டால் இனி ரூ.2000 பைன் செலுத்த வேண்டி வரும் என கூறப்படுகிறது.