பைக்கில் பின்னால் ஹெல்மெட் அணியாதவருக்கும் அபராதம் - விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் அதிகாரி!
பைக்கில் பின்னால் ஹெல்மெட் அணியாமல் இருப்பவருக்கும் அபாரம் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெல்மெட் அவசியம்
ஹெல்மெட் உயிர் கவசமாகும். அதை கண்டிப் பாக அனைவரும் அணிய வேண்டும். சாலை விதிமுறைகளை கடைபிடித்தால் மட்டுமே விபத்துகளை தடுக்க முடியும்.
தற்பொழுது போக்குவரத்து விதிமீறல் அபராதங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியா விட்டால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். பின்னால் ஹெல்மெட் அணியாமல் இருப்பவருக்கும் அபராதம் விதிக்கப்படும்.
விழிப்புணர்வு
மது போதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10000 செல் போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் ரூ.1000 லைசென்ஸ் இல்லாவிட்டால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும்.
இந்நிலையில், சாலை விதிகளை பாதுகாத்து தங்களை தற்காத்து கொள்ளும்படி, சென்னை, பாண்டி பஜார் காவல் அதிகாரி சேகர் தலைமையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.