இனி விண்வெளியில் கூட திருமணம் செய்துகொள்ளலாம்; செலவு இதுதான் - முழு விவரம்!
நிறுவனம் ஒன்று திருமணம் செய்வதில் புதுமையை அறிமுகப்படுத்தியுள்ளது.
நெப்டியூன்
ஸ்பேஸ் பர்ஸ்பெக்டிவ் என்கிற நிறுவனம் புதிய வகை ஸ்பேஸ் ஷிப்பை அறிமுகப்படுத்தியுள்ளனர். அது நெப்டியூன் என அழைக்கப்படுகிறது. ஒரு கால்பந்து மைதானத்தின் அளவு பெரியதாக இருக்கும் இதில் பூமியிலிருந்து 1,00,000 அடி தொலைவுக்கு கூட்டி செல்கிறது. ஆறு மணி நேரம் வரை பறக்கக்கூடியது.

இதில் நிறைய ஜன்னல்கள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் வெளியில் ஆகாயத்தையும், கீழே பூமியையும் காணலாம். கார்பன் நியூட்ரல் பலூன் என்பதால் சுவாச பிரச்சனைகள் ஏற்படாது எனக் கூறப்படுகிறது. இதனை, 2024ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரவுள்ளனர்.
அசத்தல் திட்டம்
இதில் பயணிக்க இதுவரை 1000 டிக்கெட்கள் விற்கப்பட்டுள்ளன. 1 டிக்கெட்டின் விலை சுமார் 1 கோடி ரூபாய். 8 பேர், மற்றும் ஒரு பைலட் அமரும் அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக இந்த ஸ்பேஸ் ஷிப்பை புக் செய்பவர்களுக்கு, கூடுதலாக டேபிள்கள், இருக்கைகள் வேண்டுமென்றால் வசதிகள் செய்து தரப்படும்.

இந்த பயணத்தின்போது சாப்பிட, அருந்த தேவையான உணவு வகைகளை முன்பதிவு செய்துகொள்ளலாம்.
திருமணம்
இலவச WiFi காக்டெயில், பாட்டு கேட்கும் வசதி (நாம் விரும்பும் பிளே லிஸ்ட்டை முன்னரே தெரிவித்து வாங்கிக்கொள்ளலாம்), ஸ்கை வியூ மற்றும் அனைத்து வசதிகளுடன் கூடிய கழிவறை, 360 டிகிரி வியூ தரும் வகையில் ஜன்னல்கள் ரிக்லைனிங் (சாய்ந்துகொள்ளும்) சீட்கள், ஒரு டைனிங் டேபிள் முதல் திருமண மேடை அமைக்கும் அளவு இடவசதி.

இதை தவிர தனிப்பட்ட முறையில் பயணிக்கு வேறு ஏதாவது வசதிகள் தேவைப்பட்டால் கஸ்டமைஸ் செய்துகொள்ளலாம்.
பூமியிலிருந்து புறப்படும் இந்த நெப்டியுன், விண்ணை அடைந்ததும் சுற்றுவட்டபாதையில் விடப்படும். இவை ஆர்பிட்டில் சுற்றிவர புதுபிக்கப்பட்ட ஹைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது. ராக்கெட்டின் உதவி தேவையில்லை எனக் கூறப்பட்டுள்ளது.