பாலியல் சுற்றுலா மையமாக மாறிய ஆசிய நகரம்? இப்படி ஒரு பின்னணியா!
பாலியல் சுற்றுலா மையமாக உயர்ந்து வரும் ஆசிய நகரம் குறித்து பார்க்கலாம்.
டோக்கியோ
ஜப்பான், டோக்கியோ ஆயிரக்கணக்கான வெளிநாட்டு ஆண்களை ஈர்க்கும் வகையில் இப்போது பாலியல் சுற்றுலாவுக்கான இடமாக மாறியுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள அந்நாட்டின் Liaison Council Protecting Youths-ன் (Ciboren) பொதுச் செயலாளர் யோஷிஹிட் தனகா, ஜப்பான் ஒரு ஏழை நாடாக மாறிவிட்டது. தொற்றுநோயைத் தொடர்ந்து பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட உடனேயே இங்கு வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பாலியல் தொழில்
அதில் பெரும்பாலானவர்கள் சீனர்கள். இந்த வருகையால், இருபது வயதிற்குட்பட்ட பதின்ம வயதினரும் பெண்களும் உயிர்வாழ்வதற்காக பாலியல் தொழிலுக்குத் திரும்புவது கவலையளிக்கும் வகையில் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், சமீப காலங்களில் டோக்கியோவின் கபுகிச்சோ மாவட்டத்தில் பாலியல் தொழில் வேகமாக அதிகரித்து வருவதாக TokyoHive கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.