இனிமேல் லோயர்பர்த் இவங்களுக்குதான் - ரயில்வே முக்கிய அறிவிப்பு!
லோயர் பர்த் ஒதுக்கீடு குறித்து புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
லோயர் பர்த்
இந்திய ரயில்வே நிர்வாகம் ரயிலில் உள்ள லோயர் பர்த் ஒதுக்கீடு குறித்து புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. ரயில்வேயின் கணினிமயமாக்கப்பட்ட பதிவு முறைப்படி,

மூத்த குடிமக்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு கீழ் படுக்கை ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கிறது. உங்களுக்கு லோயர் பர்த் ஒதுக்கப்பட்டிருந்தாலும்,
ரயில்வே அறிவிப்பு
அதே பெட்டியில் மூத்த குடிமக்களுக்கு மேல் அல்லது நடு பர்த் வழங்கப்பட்டிருந்தால், அவர்களை கீழ் படுக்கைக்கு மாற்றுவதற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது.

அதேபோல் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தூங்கும் நேரமாகும். இந்த நேரத்தில், மேல் அல்லது நடு பர்த்களில் உள்ளவர்கள்,
கீழ் படுக்கையில் இருப்பவர்களை எழுந்து அமரும்படி கட்டாயப்படுத்தக் கூடாது. இதே விதி சைட் லோயர் மற்றும் மேல் பர்த் படுக்கைகளுக்கும் பொருந்தும்.