License எடுக்குறது இனி அவளோ ஈசி இல்லை...புதுசா வந்த அடுத்தடுத்த ரூல்ஸ்!!
Driving License எடுப்பதில் புதிய விதிகள் வந்துள்ளது.
Driving License
நாட்டில் எங்கு வேண்டுமெனாலும் வாகனம் ஓட்ட, Driving License வைத்திருப்பது அவசியம். 18 வயது பூர்த்தி யாகும் நிலையில், அதனை முதலில் LLR பெற்று, அதன் பிறகு வாகனம் ஓட்டி பழகி, அதன் பின்னர் Driving License எடுத்து கொள்ளலாம்.
அப்படி இருந்து வந்த நடைமுறைகள் இருந்து வரும் நிலையில், அதனை சற்று மாற்றியது மத்திய அரசு. ஜூன் 1-ஆம் தேதி முதல் புதிய வழிமுறைகள் நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, போக்குவரத்து அலுவலகம் செல்லாமல், driving school மூலமாகவே license பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. அதில் பலருக்கும் பல சந்தேகங்கள் இருந்தன.
புதிய விதிகள்
பலரும் வந்த சந்தேகம் நேராக private driving school'இல் இருந்தே ஓட்டுநர் உரிமம் பெற்று விடலாம் என்றே. ஆனால், விஷயம் அதுவல்ல. டெஸ்ட் மட்டும் தான் இந்த driving school'கள் நடத்தும்.
ஆனால், license RTO மூலம் தான் பெறமுடியும். இந்த டெஸ்டை நடத்துவதற்கும் பல வழிமுறைகளை மத்திய அரசு வழங்குகிறது.
அதனை பின்பற்றும் driving school'இல் நாம் டெஸ்ட் பூர்த்தி செய்து அதனை RTO'வில் சமர்ப்பித்தால் தான், license கிடைக்கும். அப்படி இல்லை என்றால், நாம் நேராக RTO சென்று டெஸ்ட் முடித்து license பெறலாம்.