யாரா இருந்தாலும் இனி ஆக்ஷன் தான் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
வாகனங்களில் ஸ்டிக்கர் ஊட்டினால் பறிமுதல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்டிக்கர் விவகாரம்
வாகனங்களில் மீடியா, வக்கீல், காவல்துறை போன்ற வாசகங்களை பலரும் ஒட்டி சென்னையில் மாநகரில் பயணித்து வருகிறார்கள். இவ்வாறு ஸ்டிக்கர் ஒட்டி வாகனத்தை இயக்கக்கூடாது என்றும் ,மீறினால் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல் துறை உத்தரவிட்டிருந்தது.
இதனை தமிழநாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
பறிமுதல் தான்
அம்மனுவில், கார் கண்ணாடிகளிலும் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு தவிர்ப்பதை முறையாக அமல்படுத்தவேண்டும் என்றும் வாகனங்களில் அரசியல் கட்சி, தலைவர்களின் படங்கள் ஒட்டுவதையும், தடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதி, மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விதிகளை மீறி இருக்கும் அரசியல் வாதிகளின் வாகனங்களை உடனடியாக பறிமுதல் செய்யவேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டனர்.
அதே போல, கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியுள்ள வாகனங்களை சோதனை செய்யவேண்டும் என குறிப்பிட்டு, வழக்கு தொடர்பாக 20-ஆம் தேதி விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.