இனி பாஸ்போர்ட் விண்ணப்பிக்க இந்த சான்றிதழ் கட்டாயம் - உடனே கவனிங்க!

Government Of India Passport
By Sumathi Mar 05, 2025 03:30 PM GMT
Report

பாஸ்போர்ட்டுகளுக்கு புதிய விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட்

மத்திய அரசு சமீபத்தில் பாஸ்போர்ட் விதிகளில் மாற்றங்களைச் செய்துள்ளது. அதன்படி, அக்டோபர் 1, 2023 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க பிறப்புச் சான்றிதழை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.

passport

பிறந்த தேதியை நிரூபிக்க முன்னர் பல ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், இனிமேல் இந்த குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு பிறந்தவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

குழந்தையின் டயப்பர், சிந்திய சிறுநீர் பை; விமானத்தில் அருவருப்பு விஷயம் - பணிப்பெண் ஆதங்கம்

குழந்தையின் டயப்பர், சிந்திய சிறுநீர் பை; விமானத்தில் அருவருப்பு விஷயம் - பணிப்பெண் ஆதங்கம்

புதிய விதி

பிறப்புச் சான்றிதழின் தேதியை பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் அலுவலகம், நகராட்சி அல்லது பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டம், 1969 இன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட வேறு எந்த அமைப்பாலும் வழங்கப்பட வேண்டும். திருத்தப்பட்ட பாஸ்போர்ட் சட்டத்தின்படி,

இனி பாஸ்போர்ட் விண்ணப்பிக்க இந்த சான்றிதழ் கட்டாயம் - உடனே கவனிங்க! | New Rules For Passport Indian Govt Details

இந்த புதிய விதிகள் விரைவில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடையாள மோசடியைத் தடுக்க இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2023 அக்டோபர் 1-க்கு முன்பு பிறந்திருந்தால், அவர்கள், பள்ளிச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்ற மாற்று ஆவணங்களை பிறப்புத் தேதிக்கான சான்றாகப் பயன்படுத்தப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.