மார்ச் முதல் இத்தனை மாற்றமா? புதிய UPI, TDS, TCS விதிகள் - மக்கள் கவனத்திற்கு!
2025 மார்ச் மாதம் முதல் மாறப்போகும் புதிய விதிகள் குறித்து பார்க்கலாம்.
மார்ச் 2025
மார்ச் 1ஆம் தேதி முதல் யூனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸில் (UPI) பரிவர்த்தனைகள் தொடர்பான மாற்றம் இருக்கும். அதன்படி, பயனர்கள் UPI மூலம் காப்பீட்டு பிரீமியத்தைச் செலுத்துவது எளிதாக இருக்கும்.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகியவை 3% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஃபிக்சட் டெபாசிட் தொடர்பான விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இதன்மூலம், FD முதலீட்டாளர்களுக்கான வருமானம் பாதிக்கப்படலாம்.
நிலையான வைப்புத்தொகை (FD) தொடர்பான பல புதுப்பிப்புகள் மார்ச் மாதத்தில் நடைமுறைக்கு வரும். இந்த மாற்றங்கள் FD முதலீட்டாளர்களுக்கு, குறிப்பாக குறுகிய கால வைப்புத்தொகை உள்ளவர்களுக்கு வருமானத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
புதிய விதிகள்
சிஎன்ஜி, பிஎன்ஜி மற்றும் விமான எரிபொருள் (ஏடிஎஃப்) ஆகியவற்றின் விலைகள் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் திருத்தப்படும். பின், புதிய கட்டணங்கள் வெளியிடப்படும். விமான எரிபொருளின் விலையில் மாற்றம் ஏற்பட்டால் அதன் விளைவாக விமான டிக்கெட் விலையும் மாறும். இது விமானப் பயணிகளை நேரடியாகப் பாதிக்கும்.
வெளிநாட்டு கல்விக்கடனுக்கு TCS விலக்கு, 80E(3)(b) பிரிவின் கீழ், வெளிநாட்டில் கல்விக்கடன் பெற்ற மாணவர்கள் அனுப்பும் பணத்திற்கு TCS வசூலிக்கப்படாது.
பத்திரங்கள் மற்றும் வட்டி வரம்பு உயர்வு. பத்திரங்களில் இருந்து கிடைக்கும் வட்டி வரி விலக்கு ரூபாய் 10,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த மார்ச் மாதத்தில் வங்கிகளுக்கு மொத்தம் 14 நாட்கள் விடுமுறை வருகிறது. சனி, ஞாயிறு விடுமுறை மட்டுமல்லாமல் உள்ளூர் விடுமுறைகளும் இருக்கும். எனவே வங்கிக்குச் செல்வதற்கு இதுகுறித்து தெரிந்துக்கொள்வது நல்லது.