Impact Player போல - பௌலர்களுக்காக அறிமுகமாகும் புதிய விதி - பேட்டர்களுக்கு நெருக்கடி தான்!

Board of Control for Cricket in India IPL 2024
By Karthick Apr 23, 2024 10:33 AM GMT
Report

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 250 ரன்களை பல அணிகள் கடந்து விளையாடி வருகின்றது.

Impact Player

ஐபிஎல் தொடரை சுவாரசியமாக மாற்ற பல புது யுக்திகளை பிசிசிஐ கையாண்டு வருகின்றது. அப்படி அறிமுகப்படுத்தப்பட்ட விதி தான் Impact Player. 11 வீரர்களை பயன்படுத்தும் அணி, Impact player விதிமுறையை மற்றொரு வீரரை விளையாட வைக்க இந்த விதி உதவுகிறது.

new-rule-in-ipl-like-impact-player

இது பெரும்பாலும் பேட்டிங் கைகொடுக்கும் நிகழ்வாக அமைகிறது. அணிகள் ரன் ரேட் குறைகிறது, பெரிய ஸ்கோர் இல்லை என்றால் உடனே இந்த விதியின் மூலம் பந்துவீச்சாளர் ஒருவருக்கு பதிலாக பேட்டர் ஒருவரை உள்ளே கொண்டு வந்து விளையாடுகிறது.

new-rule-in-ipl-like-impact-player

இந்த ஆண்டு ஐபிஎல்லில் தொடர்ந்து 250 ரன்களை நெருங்கியோ அல்லது அதனை கடந்த எளிதில் அணிகள் ரன்கள் எடுக்க இதுவும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயமாகும்.

12 நாட்கள் நடந்த டெஸ்ட் - மல்லுக்கட்டிய இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா!! வெற்றி யார் தெரியுமா?

12 நாட்கள் நடந்த டெஸ்ட் - மல்லுக்கட்டிய இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா!! வெற்றி யார் தெரியுமா?

புதிய விதி 

ஆனால், பௌலர்கள் இதனால் பெரும் சவாலை சந்திப்பதாக பல முறையீடுகள் இருந்து கொண்டே தான் இருக்கின்றன. இந்த சூழலில் தான் தற்போது பௌலர்களுக்காக புதிய விதி ஒன்றை அறிமுகப்படுத்தும் ஆலோசனையில் பிசிசிஐ இருப்பதாக தெரிகிறது.

new-rule-in-ipl-like-impact-player

அதாவது, இதுவரை போட்டிகளில் பந்துவீச்சாளர் ஒருவர் 4 ஓவர்களை மட்டுமே வீச அனுமதி உள்ளது. இதனை மாற்றி, ஒரு பந்துவீச்சாளர் 5 ஓவர் வரை வீச வழிவகை செய்யும் புதிய விதி விரைவில் அமலுக்கு வரலாம் என தகவல் வெளிவருகின்றன. இது இன்னும் ஆலோசனை நிலையில் தான் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.