12 நாட்கள் நடந்த டெஸ்ட் - மல்லுக்கட்டிய இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா!! வெற்றி யார் தெரியுமா?

England Cricket Team South Africa National Cricket Team
By Karthick Apr 22, 2024 08:13 PM GMT
Report

டெஸ்ட் போட்டிகள் சாதாரணமாக 5 நாட்கள் மட்டுமே நடைபெறும்.

டெஸ்ட் போட்டிகள்

கிரிக்கெட்டில் பாரம்பரியமான போட்டி என்றால் அது டெஸ்ட் தான். 5 நாட்கள் 2 இன்னிங்ஸ் நடைபெறும் இப்போட்டிக்கு இன்னும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து தான் வருகிறது.

longest-test-match-played-ever12-days-played

தற்போதைய டி20 கிரிக்கெட் காலத்தில், டெஸ்ட் போட்டி மீது ரசிகர்களுக்கு இன்னும் ஆர்வத்தை ஏற்படுத்த டெஸ்ட் உலகக்கோப்பையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 5 நாட்கள் டெஸ்ட் போட்டிகள் நடைபெறுவது தெரியும். ஆனால், 12 நாட்கள் ஒரு டெஸ்ட் போட்டி நடந்துள்ளது உங்களுக்கு தெரியுமா..?

longest-test-match-played-ever12-days-played

கிரிக்கெட் போட்டிகள் நடைமுறைக்கு வந்த காலகட்டத்தில், சில டெஸ்ட் போட்டிகளில் வீரர்கள் அவுட் ஆகும்வரை விளையாட அனுமதி இருந்தது. அப்படி தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த போட்டி கடந்த 1939ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளது. தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி, மார்ச் 3ஆம் டெஸ்ட் போட்டியில் விளையாட துவங்கியது.

12 நாட்கள்..

இப்போட்டி தான் தொடர்ந்து 12 நாட்களாக அதாவது மார்ச் 14-ஆம் தேதி வரை நடைபெற்றுள்ளது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து, 530 ரன்களை குவித்தது. அந்த அணியில், பீடர் வன் டீர் பிஜி(Pieter van der Bijl) 125 ரன்களையும், டுட்லே நர்ஸ்(Dudley Nourse) 103 ரன்களையும் குவித்தனர். இங்கிலாந்து அணியில் ரேக் பெர்க்‌ஸ்(Reg Perks) 5 விக்கெட்களை எடுத்தார்.

longest-test-match-played-ever12-days-played

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 316 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. லெஸ் அமிஸ்(Les Ames) அதிகபட்சமாக 84 ரன்களை எடுத்தார். தென்னாபிரிக்கா தரப்பில் Chud Langton 3 விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். பின்னர் தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை விளையாடிய தென்னாபிரிக்கா அணியில் ஆலன் மெல்வி (Alan Melville) 103 ரன்களை எடுக்க அந்த அணி 481 ரன்களை குவித்து ஆல் - அவுட்டானது.

2013-ஆம் ஆண்டில் இருந்த பழக்கம் - விராட் கோலியுடன் நெருக்கம் காட்டிய ரோகித் மனைவி

2013-ஆம் ஆண்டில் இருந்த பழக்கம் - விராட் கோலியுடன் நெருக்கம் காட்டிய ரோகித் மனைவி

இங்கிலாந்து அணிக்கு 696 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ஆட்டம் துவங்கி 12ஆவது நாளில் 654/5 என ரன்களை குவித்து விளையாடி வந்தபோது, மழை குறுக்கிட்டது. அப்போது தொடர்ந்து விளையாடியதன் காரணமாக, வீரர்கள் பெரும் சோர்வாக இருந்த காரணத்தால், போட்டி டிரா செய்யப்பட்டது.

longest-test-match-played-ever12-days-played

இந்த போட்டிக்கு நடுவில் 2 நாட்கள் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. அதிக நாட்கள் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி என்ற காரணத்தால், இப்போட்டி கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.