பேட்டிங்கில் மிரட்டி எடுத்த டெவோன் கான்வே - புதிய சாதனை படைத்து அசத்தல்
ஐபிஎல் போட்களில் 5 ஆயிரம் ரன்களை கடந்து டெவோன் கான்வே புதிய சாதனை படைத்துள்ளார்.
4வது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதம் 9 வது ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பஞ்சாப் கிங்ஸ் அணி எதிர்கொண்டு வருகிறது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகள் மற்றும் 3 தோல்விகள் சந்தித்து இருக்கிறது. 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறது.
பஞ்சாப் கிங்ஸ் அணி எட்டு போட்டிகளில் நான்கு வெற்றிகள் மற்றும் நான்கு தோல்விகள் சந்தித்துள்ளது. 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கிறது.
சாதனை படைத்த கான்வே
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17 ஓவர்கள் 169 முடிவில் ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ருத்துராஜ் கெய்க்வாட் 37 ரன்கள் எடுத்து சிங்கந்தர் ராசா வீசிய பந்தில் விக்கெட் பறிகொடுத்தார்.பின்னர் வந்த சிவம் துபே 28 ரன்கள் எடுத்து அஷ்ரதீப் சிங் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
நிதானமாக விளையாடி வரும் டெவோன் கான்வே 84 ரன்கள் எடுத்துள்ளார். 149 ஐபிஎல் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.