புதிய ரேஷன் கார்டு விண்ணபித்தவர்களுக்கு ஜாக்பாட் - வெளியான குட் நியூஸ்!
புதிதாக ரேஷன் கார்டு கிடைக்கப்பெற்றால், தகுதியான விண்ணப்பதார்கள் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கும் விண்ணப்பிக்க முடியும்.
ரேஷன் கார்டு
2024 ஆம் ஆண்டுகான ரேஷன் கார்டுகள் விநியோகம் செய்யப்பட்டது. ஆனால் நாடளுமன்ற தேர்தலின் பணிகள் அப்போது நடைபெற்றதால் ரேஷன் கார்டுகளை வழங்குவதற்கான பணிகள் நிறுத்தப்பட்டது .
தேர்தல் பணிகள் முடிவடைந்த பிறகு ரேஷன் கார்டுகள் விநியோகம் தொடங்கியது. இதன்படி, புதிதாக ரேஷன் கார்டு கேட்டு வந்த 2,89,591 விண்ணப்பங்களில், 1,22,00 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து 80,050 ரேஷன் கார்டு வழங்கப்பட்டு விட்டது. விண்ணப்பங்களைப் பரிசீலித்து தகுதியற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இதில், கிட்டத்தட்ட 1 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படன.
மகளிர் உரிமைத்தொகை
மேலும் 68,291 விண்ணப்பங்களைச் சரிபார்க்கும் மற்றும் கள ஆய்வுகள் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குறிப்பாக புதிதாக ரேஷன் கார்டு கிடைக்கப்பெற்றால், தகுதியான விண்ணப்பதார்கள் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கும் விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.