EARTH 2.0; இறுதி கட்டத்தை எட்டிய பூமி..மனிதர்கள் வாழ புது கிரகம் வந்தாச்சு- எங்கு உள்ளது?
மனிதர்கள் வாழ தகுந்த மற்றோரு புதிய பூமி கண்டு பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இறுதி கட்டம்..
நாம் வாழும் இந்த அழகிய பூமி மெல்ல மெல்ல அழிந்து வருவதை பார்க்க முடிகிறது. காலநிலை மாற்றாத்தல் பாலைவனத்தில் பனிப்பொழிகிறது, வெப்பமான காலத்தில் மழை பெய்கிறது. மேலும் சில ஆண்டுகளாக ஆங்காங்கே நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.
இதனால் பூமி அதன் இறுதி கட்டத்தை நெருங்கி வருவதாக சிலர் கூறுகின்றனர். அந்த வகையில் விஞ்ஞானிகள் அண்மையில் ஒர் அதிர்ச்சி தகவல் வெளியிட்டனர். பூமியில் மனிதர்கள், விலங்குகள் உட்பட எந்த உயிரினமும் வாழ முடியாத நிலை ஏற்பட்டு முற்றிலும் அழிந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், இன்னும் 250 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, பூமியில் வெள்ளம் ஏற்படும் என்று அறியப்படுகிறது. பூமியில் மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களும் மறைந்துவிடும். அப்போது பூமியின் வெப்பம் 70 டிகிரி செல்சியஸை எட்டும்.
புது கிரகம்
இந்த சூழலில் எந்த உயிரினமும் வாழ முடியாத நிலை ஏற்படும் என்று தெரியவந்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில், வரும் காலங்களில் பூமி அழியும் நிலை ஏற்பட்டால் புதிதாக மனிதர்கள் வாழக்கூடிய புதிக கிரகம் உள்ளதா என நீண்ட நாட்களாக விஞ்ஞானிகள் ஆராய்சி செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது பூமியை போன்று புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது பூமியைப் போலவே, மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற தன்மைகளை கொண்ட புதிய கிரகத்தை அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் வானியல் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
பூமியில் இருந்து சுமார் 4 ஆயிரம் ஒளிஆண்டு தூரத்தில் இந்த புதிய கிரகம் அமைந்துள்ளது என்கின்றனர். பூமியின் எடையை போன்றே இந்த கிரகத்தின் எடையும் உள்ளது. இந்த கிரகத்திற்கு கேஎம்டி-2020-பிஎல்ஜி-0414 என்று விஞ்ஞானிகள் பெயர் வைத்துள்ளனர். சூரியனிலிருந்து பூமி இருக்கும் தூரத்தை போல,
2 மடங்கு தூரத்தில் இந்த கிரகம் அமைந்துள்ளது. இந்த கேஎம்டி-2020-பிஎல்ஜி-0414 கிரகத்தில் மனிதர்களுக்கு அடிப்படை தேவையான காற்று, தண்ணீர் போன்ற இயற்கை வளங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருந்த போதும் வரும் காலங்களில் இந்த கிரகம் தொடர்பாக பல புதிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.