மீண்டும் சர்ச்சையில் சிக்கிய புதிய நாடாளுமன்றம் - கலக்கத்தில் மத்திய அரசு!
டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் மழை நீர் தேங்கி சர்ச்சையான நிலையில் தற்போது குரங்கு புகுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய நாடாளுமன்றம்
புதிய நாடாளுமன்றம் முக்கோண வடிவில் கட்டப்பட்டுள்ளது. 4 மாடிகளைக் கொண்டது. நாடாளுமன்றத்தின் கட்டிட பரப்பளவு 64,500 சதுர மீட்டர். இந்த கட்டிடம் ஞான வாயில், சக்தி வாயில், கர்ம வாயில் என மூன்று வாயில்கள்அமைக்கப்பட்டுள்ளது.
விஐபி-க்கள், எம்பிக்கள், பார்வையாளர்கள் செல்வதற்கு தனித்தனி வாயில்கள் இருக்கும்படி வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற மக்களவை 888 இருக்கைகள் கொண்டதாகவும், மாநிலங்களவை 300 இருக்கைகள் கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடைபெறும்போது மக்களவையில் 1,280 பேர் அமரக்கூடிய வகையில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் டெல்லியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்தது.
வீடியோ
இந்த மழையால் நாடாளுமன்ற வளாகத்தில் மழை நீர் கசிவு ஏற்பட்டது . அப்போது அந்த பகுதியில் பிளாஸ்டிக் பக்கெட் வைத்து பிடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து 1 மணி நேரத்தில் மழைநீர் கசிவை சரி செய்யப்பட்டதாக அரசு மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ,புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்குள் குரங்கு புகுந்து அட்டகாசம். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அறையில் உள்ள நாற்காலியில் குரங்கு ஒன்று சுற்றித் திரிந்து, சாவகாசமாக அமர்ந்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது