கடலுக்குள் மறையும் தீவு: புதிதாக உருவாகும் பெருங்கடல் - கன்முன்னே அதிசயம்
ஆப்ரிக்க கண்டம் இரண்டாக பிரிய தொடங்கி உள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
2ஆக பிரியும் கண்டம்
கிழக்கு ஆப்ரிக்காவில் ரிப்ட் ஏற்பட்டு உள்ளது. அதன்படி 56 கிலோ மீட்டர் தூரத்திற்கு நில தட்டுகள் நகர்ந்து உள்ளன. எத்தியோப்பியா பாலைவனத்தில் இந்த நில பிரிவு ஏற்பட்டு உள்ளது. இந்த பகுதியில் வரும் வருடங்களில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் புகுந்து அது கடலாக மாறும்.
இங்கே இருக்கும் மூன்று நில அடுக்குகள் ஏற்கனவே பிரிய தொடங்கி விட்டனவாம். African Nubian, African Somali, Arabian ஆகிய அடுக்குகள் பிரிய தொடங்கி உள்ளன. இவை சாட்டிலைட்டில் மட்டுமின்றி கண்ணால் பார்க்கும் அளவிற்கு பிளவு தென்பட தொடங்கி உள்ளது.
அதிசய நிகழ்வு
தற்போது இங்கு இருக்கும் ஸாம்பியா, உகாண்டா பிரிந்து சென்று இடையில் கடல் பகுதிகள் வரலாம் என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இது மொத்தமாக பிரிய இன்னும் சில நூறு ஆண்டுகள் ஆகும்.
பெரிய அளவில் நிலநடுக்கங்கள் ஏற்படும் பட்சத்தில் இது வேகமாக நடக்கலாம். ஆனாலும் அடுத்த 500 வருடத்தில் இந்த புதிய கடல் தோன்ற வாய்ப்பு இல்லை. கொஞ்சம் கொஞ்சமாகவே இது நடக்கும். ஏதாவது மிகப்பெரிய நிலநடுக்கம், சுனாமி எல்லாம் ஒரே நாளில் ஏற்பட்டால் திடீர் மாற்றங்கள் இதில் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.