பூமியை நோக்கி வரும் பேராபத்து; துல்லியமாக இந்த வருடத்தில் - நாசா எச்சரிக்கை!
விண்கல் ஒன்று பூமியைத் தாக்க 72% சதவீத வாய்ப்புகள் இருப்பதாக நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆராய்ச்சி
அமெரிக்காவின் மாரிலாந்தில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் ஆய்வுக்கூடத்தில் கிரகங்களின் பாதுகாப்பு தொடர்பான சோதனை நடத்தப்பட்டது. இதில் விண்வெளியிலிருந்து பூமிக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டது.
இந்த சோதனை தொடர்பாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் "இந்த ஆராய்ச்சியில், வருங்காலங்களில் விண்கற்களால் உலகுக்கு அதிக ஆபத்துகள் இருந்துவரும் நிலையில், அதிலிருந்து தற்காத்துக்கொள்ள நாம் தயாராக இருக்கிறோமா என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
விண்கல்
இதில், மனிதர்களால் இதுவரை கண்டறியப்படாத விண்கல் ஒன்று பூமியை நோக்கி நகர்வதாகவும், இன்னும் 14 வருடங்களில் துல்லியமாக 2038-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி பூமியை தாக்கி அதிக சேதங்களை ஏற்படுத்த 72 சதவீதம் வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த விண்கல்லின் எடை, அளவு மற்றும் தன்மைகள் குறித்து ஆய்வில் தெரிந்துகொள்ள முடியவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வானது விண்கற்களால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பூமியைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட நாசாவின் DART (Double Asteroid Redirection Test) எனப்படும் அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் நடத்தப்பட்ட முதல் ஆய்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது.