மக்களே அபாயம்..ஏசியின் மூலம் பரவும் உயிர் கொல்லும் நோய்; 4 பேர் பலி - ECDC எச்சரிக்கை!

Argentina World
By Swetha Aug 28, 2024 11:00 AM GMT
Report

 ஏர் கண்டிஷனிங் முலமாக பரவும் நோயால் தற்போது 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏசி-யின் மூலம்..

உலகில் தற்போது புதுபுது நோய்கள் நாள் தோறும் உருவாகின்றது. இந்த நிலையில், அர்ஜென்டினாவில் தற்போது ஏசி.யில் இருந்து புதிய வகை நோய் பரவி வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டு இதுவரை 4 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளதாக அர்ஜென்டினாவின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மக்களே அபாயம்..ஏசியின் மூலம் பரவும் உயிர் கொல்லும் நோய்; 4 பேர் பலி - ECDC எச்சரிக்கை! | New Legionnaires Disease Spreads Through Ac

அதிக காய்ச்சல, உடல்வலி மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட 4 பேரும் இரட்டை நிமோனியா நோய்க்கான அடிப்படைக் காரணம் லெஜியோனேயர்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த நோயின் பெயர், லெஜியோனேயர்ஸ். இது, லெஜியோனெல்லா என்ற பாக்டீரியாவால் ஏற்பட்டு, நுரையீரலை பாதிப்பதாக கூறப்படுகிறது. சான்-மிகுவல் டி-டுகுமான் நகரில் உள்ள ஒரே மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இந்த 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.

2 நாளில் மரணம் உறுதி...தீவிரமாக பரவி வரும் மர்ம நோய் - அச்சத்தில் உலக நாடுகள்!

2 நாளில் மரணம் உறுதி...தீவிரமாக பரவி வரும் மர்ம நோய் - அச்சத்தில் உலக நாடுகள்!

கொல்லும் நோய்

மேலும், இதே பகுதியில் மேலும் 7 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த பாக்டீரியா தொற்று வேகமாக பரவி வருகிறது. ஆனால் இது ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவவில்லை என கூறப்படுகிறது.

மக்களே அபாயம்..ஏசியின் மூலம் பரவும் உயிர் கொல்லும் நோய்; 4 பேர் பலி - ECDC எச்சரிக்கை! | New Legionnaires Disease Spreads Through Ac

'லெஜியோனெல்லா' பாக்டீரியா கொண்ட சிறிய நீர்த்துளிகளை சுவாசிக்கும் போதோ அல்லது இந்த பாக்டீரியா கலந்த தண்ணீரை குடித்தாலோ நுரையீரல் தொற்று ஏற்படும். அசுத்தமான நீர், அசுத்தமான ஏசி.களில் இருந்து இந்த பாக்டீரியா உருவாகி தாக்குவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. முன்னதாக, அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் கடந்த 1976ம் ஆண்டு, அமெரிக்க ராணுவத்தின் படை பிரிவு வீரர்களிடையே 'லெஜியோனேயர்ஸ்'நோய் முதன் முதலில் கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.