2 நாளில் மரணம் உறுதி...தீவிரமாக பரவி வரும் மர்ம நோய் - அச்சத்தில் உலக நாடுகள்!
மக்களைக் கொல்லக்கூடிய அரிய சதை உண்ணும் பாக்டீரியா வேகமாக பரவி வருகிறது.
மர்ம நோய்
உலக நாடுகளை உலுக்கிய கொரோனா தொற்று பரவல் சற்று ஒய்வு பெற்றுள்ள நிலையில், தற்போது ஜப்பான் நாட்டு மக்களிடையே STSS எனப்படும் அரிய வகை நோய் பரவி வருகிறது. இது மீண்டும் அச்சத்தை உண்டாக்கி வருகிறது.
முன்னதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கூட பல மாதங்கள் கழித்தே உயிர் பிரியும் ஆனால், இந்த வகை நோய், தாக்கிய இரண்டே நாட்களில் உயிரைக் கொல்லும் எனப்படுகிறது. STSS என்றால் streptococcal toxic shock syndrome எனப்படுகிறது. இந்த வகை நோய் ஜப்பானிய மக்களிடையே கண்டறியப்பட்டது.
இது உடல் பகுதியை சாப்பிட கூடிய பாக்டீரியாவால் ஏற்பட கூடியது என்பதை மருத்துவ வல்லுநர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அடுத்த 48 மணி நேரத்தில் உயிரிழக்கக்கூடும் என கூறப்படுகிறது. ஜப்பான் மட்டுமின்றி, உலக நாடுகளை ஒரு கனம் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
தீவிர பரவல்
இதுவரையிலும் சுமார் 977 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 941 ஆக இருந்ததாகவும் தொற்று நோய்களுக்கான தேசிய நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக group A Streptococcus எனப்படும் GAS வகை நோய், அதிகப்படியான மரணங்களை ஏற்படுத்தும் என்றும்,
இந்த வகை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் தீவிரமாக பரவுமாம். மூட்டு வலி, தொண்டையில் வீக்கம் அல்லது புண், குமட்டல், வாந்தி உள்ளிட்டவை இந்த அரிய வகை நோயின் முதற்கட்ட அறிகுறிகள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் காய்ச்சல், குறைந்த ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படும் என்றும், இதனைத் தொடர்ந்து சுவாசப் பிரச்சனைகள் ஏற்பட்டு, உடல் உறுப்புகள் செயலிழந்து மரணிக்க நேரிடும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த வகை நோய் முதியவர்களை அதிகம் தாக்கும் என்றும்,
குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களை அதிகம் தாக்கும் தன்மை கொண்டது.இந்த அரிய வகை நோய் பரவாமல் இருக்க, கைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.